வேலூர்: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (டிச. 7) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக இன்று (டிச.8) புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி, தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று (08.12.2022) மதியம் முதல் நாளை (09.12.2022) வரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாண்டஸ் புயலால் மழை இருக்கும் காரணத்தால் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை மறுப்பு: சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்