ETV Bharat / state

வேலூர் போக்குவரத்து அலுவலகத்தில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் - RTO

வேலூர்: வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கட்டுக் கட்டாக  கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் போக்குவரத்து அலுவலகத்தில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்
author img

By

Published : Jun 27, 2019, 5:15 PM IST

தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்புத் துறையின் துணை கண்காணிப்பாளர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தச் சோதனையில் கட்டுக் கட்டாக கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

இதுவரை சுமார் ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சோதனையின் முடிவில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

Intro:ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு வழங்க லஞ்சம் பெறப்பட்டதா ?

வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிரடி சோதனை

கணக்கில் வராத பணம் கட்டு கட்டாக பறிமுதல்

Body:தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர் இது தொடர்பாக வரும் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் சோதனை நடத்துகின்றனர் இந்த நிலையில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று திடீரென வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர் அதன்படி வேலூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணகுமார் மற்றும் ஆய்வாளர்கள் விஜய் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனை நடத்தினர் அப்போது கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது இதுவரை சுமார் ஒரு லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது சோதனையின் முடிவில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர் இச்சம்பவம் வேலூர் மாவட்ட போக்குவரத்து வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.