ETV Bharat / state

சர்வதேச கலை மற்றும் விளையாட்டு விழாவினை துவக்கி வைத்த கிரிக்கெட் வீரர் ரஹானே! - csk rahane

காட்பாடி விஐடி பல்கலைக்கழக சர்வதேச கலை கலாசார மற்றும் விளையாட்டு போட்டிகள் அடங்கிய விழாவினை இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரஹானே துவக்கி வைத்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 23, 2023, 8:42 PM IST

சர்வதேச கலை மற்றும் விளையாட்டு விழாவினை துவக்கி வைத்த கிரிக்கெட் வீரர் ரஹானே!

வேலூர்: காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் சர்வதேச கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டு போட்டிகள் அடங்கிய கலாசார திருவிழா இன்று காலையில் மாரத்தான் போட்டிகளுடன் துவங்கப்பட்டது. இதன் துவக்க விழாவானது பல்கலைக்கழக துணைத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இதில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜின்கியா ரஹானே கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து ரிவேரா எனப்படும் கலை விளையாட்டு திருவிழாவினை துவங்கி வைத்தார். இந்த கலை கலாசாரம் மற்றும் விளையாட்டுத் திருவிழாவில் பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

மேலும் மாராத்தான் போட்டியில் முதலிடம் வென்ற பெண்கள் பிரிவில் மதுராவுக்கும் ஆண்கள் பிரிவில் பாஸ்கருக்கும் பதக்கங்களையும் சான்றுகளையும் ரஹானே வழங்கினார். பின்னர் விழாவில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரஹானே பேசுகையில், 'தற்போது ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு விளையாடுவதால் உற்சாக வரவேற்பளித்த மாணவர்களை பாராட்டுகிறேன். இந்த சர்வதேச கலாசார விழாவினை துவக்கி வைத்து பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும் எனக்கு மகிழ்ச்சி என்னவென்றால் ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடுவது தான். மேலும் மாணவர்களாகிய நீங்கள் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறீர்களோ அதே போல் விளையாட்டிற்கும், கலைக்கும் முக்கியத்துவம் அளித்து அதில் பங்கேற்க வேண்டும்.

நான் அவ்வளவாக கல்லூரிக்கு சென்றதில்லை, அதனால் இது போன்ற கலை விழாக்களில் பங்கேற்பதில்லை. இளைஞர்களாகிய நீங்கள் நல்ல எதிர்காலத்தை முடிவு செய்து மேம்பட வேண்டும்’ எனப் பேசினார்.

இதையும் படிங்க: ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்! என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.