ETV Bharat / state

நிதிநிறுவன மேலாளரை கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சி - வேலூரில் பரபரப்பு! - Private chitfund manager kidnap

வேலூர்: தனியார் நிதி நிறுவன மேலாளரை அவரது அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர்கள் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

kidnap
author img

By

Published : May 7, 2019, 9:26 PM IST

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கிரீன் சர்க்கிள் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அந்நிறுவன மேலாளர் நந்தகுமாரை கடத்திச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக நந்தகுமாரின் உறவினர்கள் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து காவல்துறையினர் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மேற்கண்ட நிறுவனத்தில் லோன் வழங்குவது தொடர்பாக நந்தகுமாருக்கும், வாடிக்கையாளர் ஒருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்றும், அந்த முன்விரோதம் காரணமாக நந்தகுமார் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் கடத்தலுக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்றும் நந்தகுமாரை எங்கு கடத்திச் சென்றுள்ளனர் என்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோவை வைத்து காவல்துறையினர் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

வேலூரில் தனியார் நிதி நிறுவன மேலாளர் மர்ம நபர்களால் கடத்தல்

வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் கிரீன் சர்க்கிள் பகுதியில் "கரின் கர் பியூட்சர் சொல்யூசன்" என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் மேலாளர் நந்தகுமாரை மர்ம நபர்கள் சிலர் இன்று அலுவலகத்தில் புகுந்து கடத்திச் சென்றுள்ளனர் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளதால் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற் பட்டுள்ளது மேலும் சம்பவம் தொடர்பாக நந்தகுமார் உறவினர்கள் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மேற்கண்ட நிறுவனத்தில் லோன் வழங்குவது தொடர்பாக நந்தகுமாருக்கும் வாடிக்கையாளருக்கும்  பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்றும் அந்த முன்விரோதம் காரணமாக நந்தகுமார் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது இருப்பினும் கடத்தலுக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்றும் நந்தகுமாரை எங்கு கடத்திச் சென்றுள்ளனர் என்றும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.