வேலூர் மாவட்டத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகாக கடந்த 50 நாள்களாக தனியார் பேருந்துகளை இயக்க முடியவில்லை. இதனால் ஓட்டுநர்கள், பழுது பார்போர் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால், வரும் காலத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் பட்சத்தில் பேருந்துக்கு 20 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது. இதனால் தனியார் பேருந்து இயக்குவதில் மிகுந்த சிரமம் ஏற்படும்.
ஆகவே, 6 மாதத்திற்கு சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். டீசல் மீதான விலையை 20 ரூபாய் குறைக்க வேண்டும்" என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:பத்திரிகையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!