ETV Bharat / state

'சிறைவாசிகளை குடிமகன்கள் போல் நடத்த வேண்டும்' - டிஜிபி சுனில் குமார் சிங்

வேலூர்: சிறை கைதிகளை ஏனைய குடிமகன்கள் போன்று நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் கேட்டுக்கொண்டார்.

டிஜிபி சுனில் குமார் சிங்
டிஜிபி சுனில் குமார் சிங்
author img

By

Published : Nov 6, 2020, 8:46 PM IST

வேலூர் தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீர்திருத்த அலுவலர்களுக்கான பயிற்சி மையத்தில், ஒன்பது மாத அடிப்படை பயிற்சியை முடித்த தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, நாகாலாந்து, தெலங்கானா, குஜராத், டெல்லி ஆகிய எட்டு மாநிலங்களைச் சேர்ந் 68 சிறைதுறை அலுவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா இன்று (நவம்பர் 6) நடைபெற்றது. அதில், தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இங்கு பயிற்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 உதவி சிறை காவலர்கள், ஆந்திராவைச் சேர்ந்த 12 சிறை காவலர்கள், தெலங்கானாவைச் சேர்ந்த 17 துணை சிறை காவலர்கள், கர்நாடகாவைச் சேர்ந்த 11 சிறை காவலர்கள், கேரளாவைச் சேர்ந்த மூன்று முதல்நிலை உதவி கண்காணிப்பாளர்கள், டெல்லியைச் சேர்ந்த நான்கு உதவி கண்காணிப்பாளர்கள், நாகாலாந்தைச் சேர்ந்த இரண்டு உதவி சிறை காவலர்கள் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த சிறை கண்காணிப்பாளர் ஒருவர் என 53 ஆண் அலுவலர்கள், 15 பெண் அலுவலர்களுக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

முன்னதாக, பயிற்சி நிறைவு பெற்ற சிறை அலுவலர்களின் மேற்கொண்ட அணிவகுப்பை ஏற்ற தமிழ்நாடு சிறை துறை டிஜிபி சுனில்குமார் சிங், பல்வேறு பாடங்களில் சிறப்பாக செயல்பட்ட 15 பேருக்கு பதக்கங்களை வழங்கினார்.

டிஜிபி சுனில் குமார் சிங்

இந்நிகழ்சியில் பேசிய சிறை துறை டிஜிபி, "வேலூர் சிறை மற்றும் சீர்திருத்த அலுவலர்கள் பயிற்சி மையம் இந்தியாவிலேயே தலைசிறந்த பயிற்சி மையமாக விளங்குகிறது. சிறப்பான பேராசிரியர்களால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சிறையில் பல்வேறு விதமான மனநிலை கொண்ட கைதிகளை சந்திக்க நேரிடும். அவர்களை திறமையுடன் கையாள வேண்டும். சிறைச்சாலைகள் தண்டனைக்கான இடமல்ல, சிறைவாசிகளை ஏனைய குடிமகன்கள் போன்று நடத்த வேண்டும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.