வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அடுத்த மாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் (55) என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் நேற்று (ஜூன் 5) இரவு 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 20 அடி அகலம், 200 அடி நீளம் கொண்ட 2 கோழி பண்ணைகளும், கோழி தீவனம் வைக்கும் அறை உள்ளிடவையும் தீ பற்றி எரிந்தன.
தீ விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் குடியாத்தம் தீயணைப்பு துறையினர் மற்றும் கே.வி. குப்பம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பண்ணையில் இருந்த சுமார் ஏழாயிரம் கோழி குஞ்சுகளும், ஐந்து லட்சம் மதிப்பிலான இதர பொருட்களும் தீயில் எரிந்தது. தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குடிபோதையில் பொதுமக்களை தாக்கிய இருவருக்கு வலைவீச்சு!