ETV Bharat / state

காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு திடீர் மாற்றம் - லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு திடீர் மாற்றம்

வேலூர்: குட்கா, மணல் கொள்ளை போன்ற விவகாரங்களில் லட்சம் வாங்கியதாகப் புகாரை அடுத்து காவல் ஆய்வாளர்கள் இரண்டு பேர் திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள சம்பவம் காவலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் ஆய்வாளர்கள்
காவல் ஆய்வாளர்கள்
author img

By

Published : Jan 5, 2020, 11:14 AM IST

வேலூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அசோகன், வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் நேற்று காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்ற வடக்கு மண்டல காவல் துறை தலைவர் (ஐஜி) நாகராஜன் திடீரென உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி நேற்று முதல் இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதற்கான காரணம் என்ன என்பது வெளியிடப்படவில்லை. ஒரே நேரத்தில் காவல் துறையில் அதிகாரமிக்க அலுவலர்கள் இரண்டு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள சம்பவம் காவல் துறையினரிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து விசாரித்தபோது, காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த அசோகன், நாகராஜ் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு குற்றச்செயல்களுக்குத் துணைபோனதாகக் கூறப்படுகிறது. சமீபகாலமாக சூதாட்டம், மணல் கொள்ளை, குட்கா விற்பனை வேலூரில் கொடிகட்டி பறக்கிறது.

ஆனால் காவல் துறை கண்டுகொள்ளாமல் கையூட்டுப்பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த வடமாநில நபர் ஒருவர் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை மறைமுகமாக விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. அவரை கைதுசெய்து விசாரணை நடத்தியபோது ஆய்வாளர் அசோகன், நாகராஜன் இரண்டு பேருக்கும் அவருடன் தொடர்பிருப்பது தெரியவந்தது.

இது போன்ற பல்வேறு புகார் காரணமாகவே ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் மாற்றப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மகாத்மா காந்தியின் சிலை முற்றிலும் நாசம்; அம்ரெலியில் பரபரப்பு!

Intro:வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்ட காவல் தனிப்பிரிவு ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு திடீர் மாற்றம் காட்டன் சூதாட்டம் குட்கா விற்பனை மணல் கொள்ளை விவகாரங்களில் லஞ்சம் வாங்கியதாக புகார்?Body:வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தனிப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த அசோகன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜ் ஆகிய இரண்டுபேரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்து வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளார் இவர்கள் 2 பேரும் வேலூர் மாவட்ட காவல்துறையில் அதிகாரம் மிக்க அதிகாரிகளாக திகழ்ந்தனர் இந்த சூழ்நிலையில் இரண்டு பேரும் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது வேலூர் மாவட்ட காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதுகுறித்து விசாரித்தபோது தனிப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்த அசோகன், வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு குற்றச்செயல்களில் துணை போனதாக கூறப்படுகிறது அதாவது வேலூரில் காட்டன் சூதாட்டம் மணல் கொள்ளை குட்கா விற்பனை கொடி கட்டி பறக்கிறது இது போன்ற விஷயங்களில் காவல்துறை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக ஆய்வாளர் அசோகன் லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பல இடங்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறது இதுதொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகம் கடந்த ஒரு மாதமாக தீவிர சோதனை நடத்தி பல நூறு டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார். சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த வடமாநில நபர் ஒருவர் தான் அண்டை மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை இறக்குமதி செய்து மறைமுகமாக விற்பனை செய்ததாக கூறப்படுகிறது அந்த நபரை பிடித்து விசாரித்தபோது ஆய்வாளர் அசோகன் மற்றும் நாகராஜன் இரண்டு பேருக்கும் அவருடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது இது போன்ற பல்வேறு புகார் காரணமாகவே ஆய்வாளர்கள் அசோகன் மற்றும் நாகராஜ் காத்திருப்போர் பட்டியலில் மாற்றப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட காவல்துறையில் பரபரப்பாக பேசப்படுகிறது

(தனி போட்டோவில் காக்கி உடையில் சிரித்தபடி இருப்பவர் நாகராஜ். குரூப் போட்டோவில் வலது புறத்தில் இருந்து 2வது ஆளாக ப்ளு கலர் சர்ட் அணிந்திருப்பவர் அசோகன்)Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.