ETV Bharat / state

பாமக வேட்பாளரை மிரட்டவில்லை - சிசிடிவி வெளியிட்ட திமுக! - பாமக வேட்பாளரை திமுக மிரட்ட வில்லை

தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியினரை, திமுகவினர் மிரட்டுவதாகக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாமகவினர் மனு அளித்தனர். அதற்கு மறுப்புத் தெரிவித்து திமுகவின் மாவட்டச் செயலாளர் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

திமுகவினர் மிரட்டுவதாக கூறி எஸ்பியிடம் மனு

author img

By

Published : Feb 8, 2022, 10:26 AM IST

வேலூர்: மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களை திமுகவினரும் மிரட்டுவதாகக் கூறி நேற்று (பிப்ரவரி 7) வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் நிலவழகன் தலைமையில் மனு அளிக்கச் சென்றனர்.

அப்போது, பாமகவினர் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி மூன்று பேர் மட்டுமே உள்ளே சென்று மனு கொடுத்துவிட்டு வாருங்கள் என்று கூறவே பாமகவினர் காவலர்களைத் தள்ளிவிட்டு கூட்டமாக உள்ளே சென்றனர். இதனால் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இது தொடர்பாக திமுகவின் வேலூர் மாவட்டச் செயலாளரும், அணைக்கட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் தனது முகநூல் பக்கத்தில்,

“சம்பவத்தன்று கடத்தப்பட்டதாக மருத்துவர் ராமதாஸால் சொல்லப்பட்ட, வேலூர் மாநகராட்சி 24ஆவது வார்டு பாமக வேட்பாளர் பரசுராமன், திமுகவில் வேட்பாளராக அறிவிக்க வேண்டி வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் (கார்த்திகேயன்), என்னை (ஏ.பி. நந்தகுமார்) சந்தித்து வந்ததிலிருந்து, அலுவலக அறையில் அமர்ந்து சீட்டு கேட்டுக் கொண்டபொழுது, எனக்கும் வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் அவர்களுக்கும் சால்வை அணிவித்துப் பேசிக் கொண்டு இருப்பதையும்” சிசிடிவி காணொலியை வெளியிட்டுள்ளார்.

திமுகவினர் மிரட்டுவதாக மனு அளித்த பாமகவினர்

மேலும் அந்தப் பதிவில், உண்மைக்குப் புறம்பாகச் செய்தியை வெளியிட்டு எங்களுக்குக் களங்கம் கற்பிப்பவர்களை இனம்கண்டு மக்கள் தோற்கடிப்பார்கள் என்று கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருந்ததும், அதற்கு மறுப்புத் தெரிவித்து வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி. நந்தகுமார் முகநூலில் பதிவிட்டுள்ள காணொலியும் வெளியாகி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ராமதாஸின் ட்விட்டர் பதிவு

  • வேலூர் மாநகராட்சி 24 வட்டத்தில், தோல்வி பயம் காரணமாக, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆர்.டி. பரசுராமனை திமுக மாவட்ட செயலாளர்கள் கடத்திச் சென்று போட்டியிலிருந்து விலக வேண்டும்; இல்லையேல் தொழில் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது!(1/2)#LocalBodyElection

    — Dr S RAMADOSS (@drramadoss) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க:நீட் விஷயத்தில் திமுக பகல் நாடகம் - ஓபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.