ETV Bharat / state

விதிமுறை மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை - வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை

வேலூர்: விதிமுறை மீறி இனி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

author img

By

Published : Sep 15, 2019, 1:45 PM IST

vellore collector

சென்னையில் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ பலியான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் விதிமீறி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை மாவட்ட நிர்வாக அலுவலர்கள் அதிரடியாக அகற்றிவருகின்றனர்.

இந்த நிலையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் ஆகியோர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பொதுமக்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் சண்முக சுந்தரம், "சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விதிமீறி வைக்கப்படும் விளம்பரப் பலகை தொடர்பாக அவ்வப்போது நடவடிக்கை எடுத்துவருகிறோம். இருப்பினும் சென்னையில் நடந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. இதையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் விதிமீறி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றுவது தொடர்பாக நேற்று அதிரடியாக சோதனை மேற்கொண்டு விளம்பரப் பலகைகளை அகற்றிவருகிறோம்.

இது தொடர்பாக சார் ஆட்சியர் தலைமையில் அந்தந்தப் பகுதிகளில் கூட்டம் நடத்தி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதையும் மீறி தொடர்ந்து விதிமீறி விளம்பரப் பலகை வைக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

Intro:சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிக்கிறது - வேலூர் மாவட்ட ஆட்சியர் பேட்டிBody:சென்னையில் அதிமுக விளம்பர பேனர் விழுந்ததில் இளம் பெண் ஒருவர் பலியான சம்பவம் தமிழகம் முழுதும் சோகம் ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவத்தை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் விதிமீறி வைக்கப்பட்ட விளம்பரப் பேனர்களை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அதிரடியாக அகற்றி வருகின்றனர் இந்த நிலையில் சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் பலியான சம்பவம் வருத்தமளிப்பதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம் தெரிவித்துள்ளார் அதாவது பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி பார்த்திபன் ஆகியோர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம், "சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விதிமீறி வைக்கப்படும் பேனர்கள் தொடர்பாக அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம் இருப்பினும் சென்னையில் நடந்த சம்பவம் வருத்தமளிக்கிறது இதையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் விதிமீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றுவது தொடர்பாக நேற்று அதிரடியாக சோதனை மேற்கொண்டு பேனர்களை அகற்றினோம் அதன்படி வேலூர் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஆகிய பகுதிகளில் விதிமீறி வைக்கப்பட்டிருந்த 1020 பேனர்களை ஒரே நாளில் அகற்றினோம் 60 முதல் 70 சதவீதம் தனியார் அமைப்புகள் அதாவது குடும்ப நிகழ்ச்சிகளுக்காக வைக்கப்படும் பேனர்கள் தான் விதி மீறி வைக்கப்படுகின்றன இது தொடர்பாக துணை ஆட்சியர் தலைமையில் அந்தந்த பகுதிகளில் கூட்டம் நடத்தி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது அதையும் மீறி தொடர்ந்து விதிமீறி பேனர் வைக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இனிவரும் காலங்களில் முன்னெச்சரிக்கையாக இதுபோன்று பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் காட்பாடியில் ஆட்டோவில் தவறி விழுந்து சிறுமி பலியான சம்பவத்தில் பெற்றோர்களுக்கும் அக்கறை இருக்க வேண்டும் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றும் ஆட்டோக்களில் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்பக்கூடாது இதுபோன்ற சம்பவத்தில் பெற்றோர்கள் தரப்பிலிருந்து தான் முதல் புகார் வர வேண்டும் ஆனால் துரதிஸ்டவசமாக அவ்வாறு வருவதில்லை என்று தெரிவித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.