ETV Bharat / state

கறவை மாடுகள் திட்டத்தில் முறைகேடு: பொதுமக்கள் சாலை மறியல்! - freebie cows

திருப்பத்தூர்: தமிழ்நாடு அரசு வழங்கும், விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு எனக்கூறி, அப்பகுதி மக்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tirupattur
People protested at Tirupattur
author img

By

Published : Dec 24, 2019, 4:39 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாதனவலசை ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில், தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் ஒரு பயனாளி 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கறவை மாட்டினை வாங்க முடியும்.

இந்நிலையில் அப்பகுதி கால்நடை மருத்துவர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர் ஆகியோர் ஒன்றிணைந்து ஆந்திர மாநிலம் பலமனேரி பகுதியிலிருந்து மலிவான விலைக்கு மாடுகளை வாங்கி அவற்றை இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்குக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதவிர, பயனாளிகளிடமிருந்து 1,000 ரூபாயும் வழிப்போக்கு செலவுக்கு பணமும் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

People protested at Tirupattur

சில மாடுகளில் சுமார் 100 கிராம் அளவிலான பாலை மட்டுமே கறக்க முடிவதாகவும் மிகவும் மெல்லிய உடல்கொண்ட மாடுகளை வாங்கிக் கொடுத்துள்ளதால் பாலுடன் ரத்தம் கலந்துவருவதாகவும் இத்திட்டத்தின் கீழ் மாடுகளைப் பெற்ற அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து ஜோன்றம்பள்ளி வழியாக திருப்பத்தூர் செல்லும் சாலையில் அரசுப் பேருந்தினை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதை அறிந்து அப்பகுதிக்கு வந்த திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த காவல் துறையினர், விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: சத்துணவில் அழுகிய முட்டைகள் :ஆட்சியரின் திடீர் ஆய்வால் அம்பலமானது!

Intro:திருப்பத்தூர் அருகே தமிழக அரசு வழங்கும் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு என பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல்Body:

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தாதனவலசை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசால் வழங்கப்பட்ட விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தில் வழங்கிய மாடுகள் பொதுவாக ஒரு பயனாளிக்கு சுமார் 35 ஆயிரம் மதிப்பிலான கறவை மாடுகள் வாங்க அரசு அனுமதித்துள்ளது. இந்நிலையில் கால்நடை மருத்துவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர் ஒன்றிணைந்து ஆந்திரா மாநிலம் உள்ள பலமனேரி பகுதியில் மிகவும் குறைந்த விலைக்கு மாடுகளை வாங்கி அதனை பயனாளிகளுக்கு கொடுத்துள்ளனர். இதற்கு பயனாளிகளிடம் இருந்து 1,000 ரூபாய் மற்றும் வழி போக்கு செலவுக்கும் பணம் வசூலித்து உள்ளனர். சிலர் குறைந்த விலைக்கு மாடுகள் வாங்கி மீதமுள்ள பணத்தை பெற்று உள்ளனர். இதன் அடிப்படையில் மாடுகள் சுமார் 100 கிராம் பால் மட்டுமே கறக்கிறது. அதுமட்டுமின்றி அந்த பாலுடன் ரத்தம் கலந்து வருகிறது. மிகவும் மெல்லிய உடல் கொண்ட மாடுகளை வாங்கிக் கொடுத்துள்ளனர் எனக் குற்றம்சாட்டி பொதுமக்கள்
50க்கும் மேற்பட்டோர் ஜோன்றம்பள்ளி வழியாக திருப்பத்தூர செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்த வந்த திருப்பத்தூர் தாலுக்கா போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

பேட்டி. முனியம்மாள், பயனாளி....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.