வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கரும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் சென்னை மருத்துவமனையில் இருக்கும் தனது சகோதரனை பார்ப்பதற்காக சகோதரி பானுமதி, பேரன் நித்தீஷுடன் சென்னை செல்வதற்காக ஆம்பூர் ரயில் நிலையம் வந்தார்.
இந்நிலையில் சென்னை செல்லும் ஏலகிரி விரைவு ரயிலில் ஏறுவதற்கு ரயில் இருப்புப்பாதையை கடக்க முயன்றபோது மங்களூருவில் இருந்து சென்னை செல்லும் மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் மோதி நிகழ்விடத்திலேயே மூன்று பேரும் பலியாகினர்.
இது குறித்து தகவலறிந்த ரயில்வே காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.