ETV Bharat / state

அராஜக அதிமுக ஆட்சியை அகற்றுவதே எங்கள் கடமை- வேலூர் திமுக வேட்பாளர் - வேலூர் திமுக வேட்பாளர்

வேலூர்: அதிமுக ,பாஜக ஆட்சியை அகற்றுவதே எங்கள் முதல் கடமை என திமுக பொருளார் துரைமுருகனின் மகனும், வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் கூறியுள்ளார்.

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பேட்டி
author img

By

Published : Mar 18, 2019, 8:42 PM IST

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அதன்படி திமுக சார்பிலும் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நேற்று சென்னையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதையடுத்து இன்று வேலூர் வந்த அவர் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கதிர் ஆனந்த் கூறியதாவது, "தமிழகத்தில் நடக்கக்கூடிய அராஜக அதிமுக ஆட்சியையும், மத்தியில் நடக்கக்கூடிய பாசிச பாஜக ஆட்சியையும் அகற்றுவதுதான் எங்கள் கடமை. தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் கூட அதுதான்.

மேலும் தமிழகத்தில் உள்ள நாற்பது தொகுதிகளும் நமதே, எல்லாத் தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பெற்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சமர்ப்பிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Intro:அதிமுக மற்றும் பாஜக ஆட்சியை அகற்றுவதே எங்கள் முதல் கடமை

துரைமுருகன் மகனும் வேலூர் தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் பேட்டி

Body:தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்.18ம் தேதி நடைபெறுகிறது இதையொட்டி திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர் அதன்படி திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது தொடர்ந்து அடுத்தடுத்து அதிமுக மற்றும் தேமுதிக பாமக ஆகிய கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர் வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை வேலூர் மற்றும் அரக்கோணம் ஆகிய இரண்டு பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன இதில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் இதேபோல் அரக்கோணம் தொகுதியில் திமுக முன்னாள் எம்பி ஜெகத்ரட்சகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஜெகத்ரட்சகன் மற்றும் கதிர் ஆனந்த் ஆகியோர் நேற்று சென்னையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர் இந்த நிலையில் இன்று துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், தான் வேலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்ப்பட்டுள்ளதையடுத்து வேலூர் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கதிர் ஆனந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கதிர் ஆனந்த், " தமிழகத்தில் நடக்கக்கூடிய அராஜக ஆட்சியையும் மத்தியில் மத்திய நடக்கக்கூடிய பாசிச ஆட்சியை அகற்றுவது எங்கள் கடமை தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் அதுதான் நாற்பதும் நமதே எல்லாத் தொகுதிகளிலும் சிறப்பான மகத்தான வெற்றியை பெற்று ஸ்டாலினுக்கு சமர்பிப்போம் என கூறினார்

Conclusion:இந்த வார இறுதியில் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.