ETV Bharat / state

ஸ்டாலின் பொய் மட்டுமே சொல்கிறார்: ஓபிஎஸ் - admk

வேலூர்: ஸ்டாலின் பொய்யை மட்டுமே சொல்கிறார் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.

ops
author img

By

Published : Jul 29, 2019, 11:18 PM IST

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் தங்களது பரப்புரையை வேகப்படுத்தியுள்ளனர். அந்தவகையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஒடுகத்தூர் பேருந்து நிலையத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “ஏ.சி.சண்முகம் இந்தத் தொகுதிக்கு செல்லப்பிள்ளை. அதிமுக தொண்டர்களுக்கான கட்சி.

ஓ.பன்னீர் செல்வம் பரப்புரை

ஸ்டாலின் உண்மையை சொல்லி வாக்கு கேட்டு ஆட்சியை பிடிக்க முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சியை பிடிக்க நினைக்கிறார் அது ஒருபோதும் நடைபெறாது. அதிமுக அரசு நூறுநாள் வேலைத்திட்டத்தை வழங்காது என்று அவர் கூறுகிறார். ஆனால் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் அதிமுக அரசு நூறு நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தும் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

இந்த வருடம் பருவமழை சரிவர பெய்யாததால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கையில் நமது தொப்புள்கொடி உறவுகளை கொன்றது அப்போதிருந்த திமுக-காங்கிரஸ் அரசு. இதையெல்லாம் நீங்கள் எண்ணிப்பார்த்து இந்தத் தேர்தலில் நல்ல தீர்ப்பை வழங்கவேண்டும்” என்றார்.

Intro: நாடாளுமன்ற வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பரப்புரை.

Body: வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெறும் நிலையில்

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து ஒடுகத்தூர் பேருந்து நிலையத்தில், பரப்புரை மேற்கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது.

ஏ.சி.சண்முகம் மக்களவை தொகுதிக்கு செல்லப்பிள்ளை,

அவர், கழகத்தில் இணைந்த நாள் முதல் இதுவரையில் சிறந்த ஆதரவை வழங்கிவருகிறார்.

எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பிறகு ஜெயலலிதா அவர்கள் கடுமையான சோதனைகளுக்கு பிறகு அசைக்க முடியாத தொண்டர்களை கொண்டுள்ளார்.

மேலும் அவர் தொண்டர்களை ஆட்சியில் அமர்த்தியவர் .

இக்கழகம் தொண்டர்களுக்கான கழகம்.

மேலும் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியமைக்க உண்மையான வாக்குறுதிகளை கொடுக்க வேண்டும், பொய் சொல்லியே ஆட்சியமைக்க பார்க்கிறார்.

தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் யவரும் இருக்க கூடாது என்பதற்காக இலவச அரிசி திட்டத்தை கொண்டுவந்தவர் அம்மா அவர்கள் .

மேலும் தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் குடிசைகளே இருக்க கூடாது என்பது ஜெயலலிதாவின் கனவு அது நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை செய்து முடித்து அம்மாவின் கனவை நிறைவேற்றுவோம்.

ஸ்டாலின் கூறுகிறார் அதிமுக அரசு நூறுநாள் வேலைத்திட்டத்தை வழங்காது, உறுதியாக கூறுகிறோம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நூறுநாட்களுக்கு பதில் நூற்றைம்பது நாட்கள் வேலை நாட்களாக அறிவிப்போம்.

மேலும் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கு 2000 ரூபாய்,வழங்கப்படும்.

இந்த வருடம் இரு பருவமழையும் சரியாக பெய்யவில்லை அதற்காக போர்கால அடிப்படையில் குடிநீர் தேவைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கடுமையான சட்ட போராட்டங்களுக்கு பிறகு காவேரி நதிநீருக்கு உச்ச நீதி மன்றம் மூலம் அரசாணை பெற்றவர் ஜெயலலிதா அவர்கள்.

மேலும் இலங்கை தமிழர்கள் நம்முடைய தொப்புள் கொடி சொந்தங்கள் அவர்கள் சிங்களத்திலே ராஜபக்சேவிடம் சரிசமமான உரிமையை கேட்டனர், அவர்களை சுட்டு வீழ்த்தினர் அவர்களுக்கு போர் கருவிகளை வழங்கியது அன்றைய ஆட்சியில் இருந்த திமுக தான் இவற்றை எல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆகையால் நீங்கள் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் நல்ல தீர்பை வழங்கவேண்டும்.

மேலும் வேலூர் மாவட்ட அணைக்கட்டுப்பகுதியில் உத்திர காவேரி பகுதியில் ஒரு அணைகூட இல்லை அதற்காக 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அணைகள் கட்டப்படும்.

மேலும் ஒடுகத்தூர் பேருந்து நிலையம் தரம் உயர்த்தப்படும்.

Conclusion: மேலும் இது தொண்டர்களால் நிறைந்த கழகம் அந்த நிலை மேலும் தொடர வேண்டும்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.