ETV Bharat / state

ஐஎப்எஸ் நிர்வாக இயக்குநர் வீட்டில் திருட முயன்ற சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது! - vellore ifs

காட்பாடி காந்தி நகரிலுள்ள ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வீட்டில் திருட முயன்றதாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 27, 2023, 12:31 PM IST

வேலூர்: வேலூரை தலைமையிடமாக கொண்டு ஐஎப்எஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் பல்வேறு மாவட்டங்களில் கிளைகள் அமைத்து இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை மாதந்தோறும் வட்டி தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்யப்பட்டன.

அதனை நம்பி சுமார் ஒரு லட்சம் பேர் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்து இருந்தனர். ஆனால் குறிப்பிட்டபடி, மாதந்தோறும் வட்டி தொகையை முறையாக வழங்கவில்லை. இதனால் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பிகாரில் மின் தடையை கண்டித்து போராட்டம் - போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு!

இதனிடையே, இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லட்சுமி நாராயணன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார். அவரை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதனிடையே, லட்சுமிநாராயணனின் வீடு காட்பாடி காந்தி நகரில் உள்ளது. இவரது வீடு பூட்டி சீல் வைக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த வீட்டில் கடந்த மே மாதம் அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

இது தொடர்பாக காட்பாடி காவல் துறையினர் மொத்தம் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, ராஜசேகர் என்பவரை மே 17ஆம் தேதி கைது செய்தனர். மற்றவர்களை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், இந்த திருட்டு முயற்சியில் தொடர்புடைய வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ் (34) என்பவரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: டேட்டிங் ஆப் மூலம் மோசடி: மேற்கு வங்க பெண்ணை கைது செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.