வேலூர் மாவட்டம் தொரப்பாடியை சேர்ந்த சிவராஜ்(45) என்பவர் கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக அரசு டாஸ்மாக் கடையில் பணியாற்றி வந்தார். இவர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மே 25ஆம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இவரது மனைவி பாமாவிற்கும்(38) கரோனா தொற்று ஏற்பட்டு கணவர் இழந்த அடுத்த நாளான மே 26 ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், இவர்களது 10, 7 வயதுடைய இரண்டு ஆண் குழந்தைகளுக்கு அரசு உதவ வேண்டும் என டாஸ்மாக் சங்கத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து அம்பாலால் குழுமம் மூலம் பெறப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகைக்கான காசோலையை மாவட்ட பொறுப்பு ஆட்சியர் பார்திபன் பெற்றோரைப் பிரிந்து வாடும் குழந்தைகளுக்கு வழங்கினார்.
![கரோனாவால் பெற்றோரை இழந்த சிறுவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-vlr-01-children-receives-assistance-scr-img-7209364_28052021124300_2805f_1622185980_489.jpg)
மேலும், இவர்கள் 12 ஆம் வகுப்புவரை இலவச கல்வி பெற வேலூரில் உள்ள தனியார்ப் பள்ளி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பார்திபன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவை விரட்ட உயிருள்ள பாம்பை சாப்பிடும் விவசாயி!