வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ராஜா இவர் கன்னிகாபுரம் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் அதிவேகமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா, அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தார். இவ்விபத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.