திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் உள்ள நியுடில்லி என்ற தெருவில் ரேஷன் அரிசி மூட்டைகள் கேட்பாரற்ற நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் மாவட்ட அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர்.
அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் அரிசி மூட்டைகளைக் கைப்பற்றி வாணியம்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மூட்டைகளை எடை இட்டதில் 400 கிலோ அரிசி மூட்டைகள் என்பது தெரியவந்தது.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அரிசி மூட்டைகளை தெருவில் வைத்துச் சென்றது யார் என தேடிவருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ரேஷன் அரிசி கடத்திய ரைஸ் மில் அதிபர் கைது!