ETV Bharat / state

18 பேரை டிடிவி தினகரன் நடுத்தெருவில் நிறுத்திவிட்டார்: ஓ.பன்னீர்செல்வம் - viluppuram

விழுப்புரம்: ஜோதிடரின் பேச்சைக் கேட்டு 18 பேரை டிடிவி தினகரன் நடுத்தெருவில் நிறுத்திவிட்டார் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

ஓபிஎஸ்
author img

By

Published : Mar 27, 2019, 7:38 PM IST

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து துணை முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் பத்தாண்டு காலம் அங்கம் வகித்த திமுக தமிழ்நாட்டுக்கு தேவையான எந்தவித வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. சேதுசமுத்திர திட்டம் என்ற பெயரில் ரூ.40 ஆயிரம் கோடியை கடலில் கொட்டி கரைத்தார்கள்.

காவிரி நதிநீர் பிரச்னையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டார். இலங்கை தமிழர் பிரச்னையில் உண்ணாவிரத நாடகமாடி தமிழர்களை கொன்று குவிக்க உதவியாக இருந்தார்.

ஆட்சியை கவிழ்ப்பேன் என்று திரிந்த ஸ்டாலின், தினகரனின் கனவுகள் எல்லாம் பொய்த்துப்போய்விட்டது. டிடிவி தினகரன் ஜோதிடரின் பேச்சைக் கேட்டு 18 பேரை நடுத்தெருவில் நிறுத்திவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாடு தற்போது அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் நில அபகரிப்பு தலைதூக்கிவிடும்” என்றார்.

Intro:விழுப்புரம்: டிடிவி தினகரன் ஜோதிடரின் பேச்சை கேட்டு 18 பேரை நடுத்தெருவில் நிறுத்தி விட்டார் துணை முதல்வர் ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.

Body:விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் விழுப்புரத்தில் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்.,

'காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் பத்தாண்டு காலம் அங்கம் வகித்த திமுக, தமிழகத்துக்கு தேவையான எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் ரூ.40 ஆயிரம் கோடியை கடலில் கொட்டி கரைத்தார்கள்.

காவிரி நதிநீர் பிரச்னையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தமிழகத்துக்கு துரோகம் செய்து விட்டார். இலங்கை தமிழர் பிரச்னையில் உண்ணாவிரத நாடமாடி தமிழர்களை கொன்று குவிக்க உதவியாக இருந்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம், மகப்பேறு கால உதவி திட்டம் போன்ற என்னற்ற திட்டங்களை திறம்பட செயல்படுத்தினார்.

ஆட்சியை கவிழ்பேன் என்று திரிந்த ஸ்டாலின், தினகரனின் கனவுகள் எல்லாம் பொய்த்துவிட்டது. டிடிவி தினகரன் ஜோதிடரின் பேச்சை கேட்டு 18 பேரை நடுத்தெருவில் நிறுத்தி விட்டார்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகம் தற்போது அமைதி பூங்காவாக திகழ்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் நில அபகரிப்பு தலைதூக்கிவிடும். திமுகவினர் தற்போது பிரியாணி, பரோட்டா கேட்டு வணிகர்களிடம் ரகளை செய்கின்றனர்' என்றார்

Conclusion:இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.சண்முகம், வைகைச்செல்வன்,குமரகுரு எம்எல்ஏ, சாரங்கபாணி எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.