தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை மக்களை ஆட்டிப் படைத்து வரும் நிலையில், மற்றொரு புறம் கறுப்புப் பூஞ்சை நோய்ப் பரவி பெரும் சவாலை ஏற்படுத்தி வருகிறது.
இந்நோய் குறிப்பாக நீரிழிவு நோயுள்ள கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஸ்டிராய்டு மருந்து காரணமாகப் பரவுவதாக மருத்துவ வல்லுநர் குழுவினர் கூறுகின்றனர்.
சென்னை மட்டுமில்லாமல் பிற மாவட்டங்களிலும், கறுப்புப் பூஞ்சை நோய்ப் பரவத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் இதுவரை 126 பேர் கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'கறுப்புப் பூஞ்சை தொற்றால் பாதித்த 126 பேரில், 27 பேர் மட்டுமே வேலூரைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 99 பேர் வெளிமாவட்டம், மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அறிகுறியுடன் இருக்கும் சில நபர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் நான் வில்லனா...விளக்கம் கொடுத்த மாதவன்!