வேலூரில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புக் குழு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக். 08) நடைபெற்றது. இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு முதன்மைச் செயலர் ராஜேஷ் லக்கானி தலைமையில் ஆட்சியர் சண்முகசுந்தரம், காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், வருவாய் அலுவலர் பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது பேசிய ராஜேஷ் லக்கானி, "2019ஆம் ஆண்டு பெய்த மழையினை கணக்கில் கொண்டு வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 34 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அதிக மற்றும் மிக அதிக அளவில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் ஏதும் இதுவரையில் கண்டறிப்படவில்லை.
மழை காலங்களில் விழும் மரங்களை அகற்றவும், கோடை காலங்களில் மரங்கள் நடுவதற்கும் 112 முதல்நிலை பொறுப்பாளர்கள், பெண்கள் சுய உதவிக் குழுவிலிருந்து 69 பெண் முதல்நிலை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிப்படையக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை பேரிடர் காலங்களில் தங்கவைக்க அடிப்படை வசதியுடன் 42 நிவாரண மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன" என்றார்.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை பேரிடரை எதிர்கொள்ள தயார்!