வேலூர்: ஓட்டேரி ஏரி அருகே வாணியங்குளம் செல்லும் சாலையில் உள்ள ஏரிக்கரையோரம் பிறந்து சில நாட்களிலான குழந்தை ஒன்றும் அருகில் அதன் அருகில் பாட்டில் ஒன்று உடைந்த நிலையிலும் கிடந்துள்ளது. இதனைக் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து பின்னர், பாகாயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், "குழந்தையின் உடலானது பாட்டிலில் அடைத்து பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. பாட்டில் உடைக்கப்பட்ட கண்ணாடி துண்டுகளும், சில கட்டிகளும் அங்கு சிதறி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் போலீசார் அந்த குழந்தையின் உடலையும், அந்த கட்டிகளையும் எடுத்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் குழந்தையை கொலை செய்து பாட்டிலில் அடைத்து வீசினார்களா?, இல்லை வேறு எதுவும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது பிறந்து சில நாட்களே ஆன குழந்தை பாட்டிலில் அடைத்து தூக்கி எறியப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: "மக்களை கொன்றவர்களுக்கு வரவேற்பு கொடுக்க அண்ணா கனவில் வந்து சொன்னாரா" - ஜார்கண்ட் ஆளுநர்!