ETV Bharat / state

குடும்ப பிரச்சினையால் 2வயது மகளை கொன்று தாயும் தற்கொலை!

வேலூர் அருகே திருமணமான மூன்று ஆண்டுகளே ஆன இளம்பெண் குடும்ப பிரச்சினை காரணமாக 2 வயது குழந்தையை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

near Vellore Mother commits suicide after killing child due to family issue
வேலூர் அருகே குடும்ப பிரச்சினையால் குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை
author img

By

Published : Mar 23, 2023, 1:18 PM IST

வேலூர் அடுத்த பெண்ணாத்தூர் அருகே உள்ள கேசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி வண்ணன்(32). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கிருத்திகா (2) என்கிற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக மணி வண்ணன் வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் சந்தியா தன்னுடைய 2 வயது மகளான கிருத்திகாவை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரி கொலையாளி அதிமுக கிளை செயலாளரா? - முதலமைச்சர் கருத்துக்கு அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!

தகவல் அறிந்து அங்கு சென்ற வேலூர் தாலுகா போலீசார் சந்தியா, அவரின் குழந்தை கிருத்திகா ஆகியோரின் உடலைக் கைப்பற்றி உடற் கூராய்வுக்காக வேலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வேலூர் தாலுகா போலீசார் சந்தியாவின் கணவர் மற்றும் மாமியார் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான ஏழு ஆண்டுகளுக்குள் பெண் தற்கொலை செய்து கொண்டால் ஆர்டிஓ, அல்லது டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்தப்படும். அந்த வகையில் சந்தியாவுக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்களே ஆன நிலையில் தற்கொலை செய்து கொண்டு உள்ளதால், இந்த வழக்கினை வேலூர் காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு விசாரிக்கிறார். இந்த வழக்கு தொடர்பான தடைய ஆதாரங்களை பெற்றுக் கொண்ட அவர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். குடும்பத் தகராறில் 2 வயது மகளை கொலை செய்து பெண் தற்கொலை கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலையைக் கைவிடுக: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால், 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலை தடுப்பு உதவி எண் - 044 - 24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் - help@snehaindia.org, நேரில் தொடர்புகொள்ள - சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ. புரம், சென்னை - 600028.

இதையும் படிங்க: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து - பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.