ETV Bharat / state

திப்பு சுல்தான் ஆட்சியில் கட்டப்பட்ட கோட்டைக்கு வெடிவைத்த கும்பல்! - Tipu sultan

வேலூர்: நாட்றம்பள்ளி அருகே திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோட்டையில் புதையல் இருப்பதாகக் கூறி கட்டடங்களுக்கு வெடிவைத்து தகர்த்த கும்பல் மீது அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

natrampalli-fort-damage
author img

By

Published : Apr 23, 2019, 9:49 PM IST

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் அமைத்துள்ளது செட்டேரி டேம். இதன் அருகில் இயற்கை எழில் மிகுந்த மலைப்பகுதி உள்ளது. சுமார் ஆயிரத்து ஐந்நூறு அடி மலையின் மேல், திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாடசாலைகள் மற்றும் குளங்கள் மதில் சுவர்களால் கட்டப்பட்டுள்ளது. இங்கு மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கிடங்குகளும், குகைகளும் அமைந்துள்ளன.

மலைப்பகுதியைக் கடந்து சென்று கட்டப்பட்டுள்ள இக்கோட்டையில் பிரம்மிக்கத்தக்க வகையில் கட்டப்பட்ட மண்டபங்கள், ஆலயங்கள் எல்லாம் சிதைந்து பாறைகள் விழுந்து நொறுங்கிய நிலையில் உள்ளது. இங்கு ஆய்வு செய்த ஓர் பெண் சாமியார், இக்கோட்டையில் அக்காலத்து நாணயங்கள், தங்க ஆபரணங்கள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் உள்ளிட்டவை இருப்பதாகக் கூறி 20-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்களை கூலிக்கு அழைத்து வந்து பாறைகளை வெடிவைத்து தகர்த்துள்ளார்.

வெடிசத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் மலை மீது சென்று பார்த்தபோது மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டையின் மதில் சுவர்கள் மற்றும் ஆலயங்களில் பாறைகள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால், வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்தை சேதப்படுத்தியவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தொல்லியல் துறை அலுவலர்கள் தலையிட்டு கோட்டையை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் அலுவலர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாட்றம்பள்ளி கோட்டைக்கு மர்மகும்பல் வெடிவைப்பு

Intro:நாட்றம்பள்ளி அருகே திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோட்டையில் புதையல் இருப்பதாக கூறி மர்மநபர்கள் இரவு பகலாக கட்டிடங்களுக்கு வெடிவைத்து தகர்ப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை.

Body: வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் அமைத்துள்ளது செட்டேரி டேம்.

இதன் அருகில் இயற்கை எழில் மிகுந்த மலைப்பகுதி உள்ளது. இந்த மலையின் மேல் திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோட்டையில் பாடசாலைகள் மற்றும் குளங்கள் ஆயிரத்து ஐநூறு அடி மலையின் மேல் மதில் சுவர்களால் கட்டப்படுள்ளது.

இங்கு மன்னர்களின் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட கிடங்குகளும் , குகைகளும் அமைந்துள்ளது.

மலைப்பகுதியை கடந்து சென்று கட்டப்பட்டுள்ள இக்கோட்டையில் பிரம்மிக்கதக்க வகையில் கட்டப்பட்ட மண்டபங்கள், ஆலயங்கள் எல்லாம் சிதைந்து பாறைகள் விழுந்து நொறுங்கிய நிலையில் உள்ளது.

இங்கு ஆய்வு செய்த ஓர் பெண் சாமியார், இக்கோட்டையில் மன்னர்கள் அக்காலத்து நாணயங்கள் மற்றும் அதிகமான தங்க ஆபரணங்கள் வெள்ளிப்பொருட்கள் இருப்பதாக கூறி 20 க்கும் மேற்பட்ட மர்மநபர்களை கூலிக்கு அழைத்து வந்து பாறைகளை வெடிவைத்து தகர்த்துள்ளனர்.

வெடிசத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் மலை மீது சென்று பார்த்த போது மன்னர்காளல் கட்டப்பட்ட கோட்டையின் மதில் சுவர்கள் மற்றும் ஆலயங்களில் பாறைகள் ஆங்காங்கே சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Conclusion: மேலும் மக்கள் வரலாற்று சிறப்பு மிக்க இந்த இடத்தை சேதப்படுத்தியவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , தொல்லியல் துறை அதிகாரிகள் தலையிட்டு கோட்டையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.