ETV Bharat / state

சிறையில் மயங்கி விழுந்த நளினி..சிகிச்சையை ஏற்க மறுப்பதால் உடல்நிலை மோசம்

வேலூர்: 7 பேர் விடுதலையில் முடிவெடுக்க தாமதிக்கும் ஆளுநரை கண்டித்து சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினி சிகிச்சையை ஏற்க மறுத்து வருவதால் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.

nalini
author img

By

Published : Feb 12, 2019, 8:57 AM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர், கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை பெற்று வருகின்றனர். அவர்களில் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் மகளிர் சிறையிலும் இருந்து வருகின்றனர். இந்த சூழலில் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் உடனடியாக தமிழக அமைச்சரவை கூடி 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியது. ஆனால் கடந்த 5 மாதங்களாக அந்த கடிதம் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் காலதாமதம் செய்து வருகிறார். அவரது இந்த செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பலர் தங்களது கண்டனத்தை எழுப்பி வருகின்றனர். இருப்பினும் ஆளுநர் வழக்கமான மௌனத்தையே கடைபிடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து, 7 பேரையும் விடுதலை செய்ய கோரி தமிழக ஆளுநருக்கு முருகன் சமீபத்தில் கடிதம் ஒன்று அனுப்பி இருந்தார் அதில் ஒன்று எங்களை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக் கொலை செய்ய அனுமதியுங்கள் என்று உருக்கமாக எழுதியிருந்தார். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முருகன் கடந்த 2-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டமும் நடத்தி வருகிறார்.

அதேபோல் அவரது மனைவி நளினியும் ஆளுநர் பன்வாரில் புரோஹித்துக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், பல்வேறு விவகாரங்களை உருக்கமாக தெரிவித்து இந்த முறை உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என தீர்க்கமாக கூறி கடந்த சனிக்கிழமை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி கடந்த 3 நாட்களாக நளினி சிறையில் உணவு உண்ணவில்லை.

undefined

இந்நிலையில், தொடர்ந்து 4-வது நாளாக நளினி தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். 3-வது நாளான நேற்று உணவு உட்கொள்ளாததால் நளினி திடீரென மயக்கம் போட்டு விழுந்ததாகவும் அவரை சிறையில் உள்ள மருத்துவமனையில் சிறைக்காவலர்கள் அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரது வழக்கறிஞர் புகழேந்தியிடம் கேட்டபோது, "தனது கோரிக்கையில் உறுதியாக நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் உணவு எதுவும் சாப்பிடாததால் திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதையடுத்து சிறை மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு குளுக்கோஸ் ஏற்ற மருத்துவர்கள் முயற்சித்தனர். ஆனால் நளினி அதையும் ஏற்க மறுத்துவிட்டார். கோரிக்கை நிறைவேறும்வரை எந்த சிகிச்சையும் மேற்கொள்ள மாட்டேன் என்று உறுதியாக கூறியுள்ளார். இதையடுத்து சிறையிலிருந்து வெளியே அழைத்து அடுக்கம்பாறை உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு நளினியை அழைத்துச் செல்ல சிறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது" என தெரிவித்தார்.

Intro:சவேலூர் சிறையில் நளினி திடீர் மயக்கம்? சிகிச்சையை ஏற்க மறுப்பதால் உடல்நிலை மோசம்

Body:முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் முருகன் மற்றும் அவரது மனைவி நளினி ஆகியோர் தனித்தனியே வேலூர் ஆண்கள் சிறையில் வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் இவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில் தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் இவர்கள் உள்பட வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தது இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு நீதிமன்ற வழக்குகள் இருந்து வந்த நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்ற நீதிபதி சமீபத்தில் தெரிவித்திருந்தார் அதன் அடிப்படையில் தமிழக அமைச்சரவை அவசரமாகக் கூட்டப்பட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது ஆனால் கடந்த 5 மாதங்களாக அந்த கடிதம் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் காலதாமதம் செய்து வருகிறார். இதனால் முருகன் நளினி உள்பட 7 பேரும் கடும் மன உளைச்சலில் உள்ளனர் இதற்கிடையில் தாங்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய கோரி தமிழக ஆளுநருக்கு முருகன் சமீபத்தில் கடிதம் ஒன்று அனுப்பி இருந்தார் அதில் ஒன்று எங்களை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக் கொலை செய்ய அனுமதியுங்கள் என்று உருக்கமாக எழுதி இருந்தார் இதற்கிடையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முருகன் கடந்த 2ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார் அதேபோல் அவரது மனைவி நளினியும் கணவருக்காகவும் அவரது கோரிக்கையை வலியுறுத்தியும் கடந்த சனிக்கிழமை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார் அதன்படி கடந்த 3 நாட்களாக நளினி சிறையில் உணவு எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் இன்று பிற்பகல் உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி உடல்நிலை மோசமானதாக வேலூர் சிறைத்துறை வட்டாரத்தில் தகவல் கசிந்தது அதாவது மூன்று நாட்களாக உணவு எடுத்துக்கொள்ளாததால் நளினி திடீரென மயக்கம் போட்டு விழுந்ததாகவும் அவரை சிறையில் உள்ள மருத்துவமனையில் சிறைக்காவலர்கள் அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது இதுகுறித்து அவரது வழக்கறிஞர் புகழேந்தியிடம் கேட்டபோது, " தனது கோரிக்கையில் உறுதியாக நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார் அவர் உணவு எதுவும் சாப்பிடாததால் இன்று திடீரென மயக்கம் போட்டு விழுந்தார் இதையடுத்து சிறை மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர் அங்கு அவருக்கு குளுக்கோஸ் ஏற்ற மருத்துவர்கள் முயற்சித்தனர் ஆனால் நளினி அதை ஏற்க மறுத்துவிட்டார் கோரிக்கை நிறைவேறும் வரை எந்த சிகிச்சையும் மேற்கொள்ள மாட்டேன் என்று உறுதியாக கூறியுள்ளார் இதையடுத்து சிறையிலிருந்து வெளியே அழைத்து அடுக்கம்பாறை உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு நளினியை அழைத்துச் செல்ல சிறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்தார்

Conclusion:கணவன் மனைவி இருவரும் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் சூழ்நிலையில் நளினி திடீரென மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் சிறை அதிகாரிகள் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது இதன்மூலம் மேலிடத்திலிருந்து அவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.