ETV Bharat / state

வேலூரில் மர்ம காய்ச்சல் 15 வயது மாணவி உயிரிழப்பு!

author img

By

Published : Nov 1, 2019, 10:48 PM IST

வேலூர்: நாட்றம்பள்ளி பகுதியில் தொடரும் மர்ம காய்ச்சலுக்கு 15 வயது அரசுப் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் மர்ம காய்ச்சல் 15 வயது மாணவி உயிரிழப்பு!

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகேயுள்ள குனிச்சியூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பழனிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் அகல்யா (15) பர்கூர் அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வருகிறார். இதில் சில தினங்களுக்கு முன்பு அகல்யாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று விடுதி காப்பாளர் அவருடைய பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.

வேலூரில் மர்ம காய்ச்சல் 15 வயது மாணவி உயிரிழப்பு!

இந்நிலையில், அகல்யாவை அவருடைய பெற்றோர் அழைத்து வந்து புதுப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அகல்யா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தொடர்ந்து நாட்றம்பள்ளி சுற்று வட்டாரப்பகுதியில் மூன்று சிறுமிகள் அடுத்தடுத்து மர்ம காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Intro:நாட்றம்பள்ளி பகுதியில் தொடரும் மர்ம காய்ச்சல் 15 வயது அரசு பள்ளி மாணவி உயிரிழப்புBody:

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெலக்கல்நத்தம் பகுதி குனிச்சியூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனி இவருக்கு இரண்டு மகள் இளைய மகள் அகல்யா 15 வயது இவர் பர்கூர் அரசு பள்ளி 10 ஆம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வருகிறார்...

சில தினங்களுக்கு முன்பு அகல்யாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று விடுதி காப்பாளர் அவருடைய பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அகல்யாவை அவருடைய பெற்றோர் அழைத்து வந்து புதுப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் சிகிச்சை பெற்று வந்த அகல்யா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் தொடர்ந்து நாட்றம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட மூன்று சிறுமிகள் அடுத்தடுத்து மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு இதனால் அப்பகுதியில் பெரும் பீதி அடைந்து வருகின்றனர் பள்ளி மாணவி இறப்பை குறித்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

மேலும் சிறுமியின் உடலை மயானத்தில் புதைக்க விடாமல் தடுத்த குடூரன் என்பவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சேகர், சங்கர் என்பவர்கள் மயானத்தில் சிறுமியின் உடல் அடக்கம் செய்ய கூடாது இந்த மயானத்தில் எங்களுக்கு 15 சென்ட் இடம் உள்ளது என்று பிணத்தை புதைக்க கூடாது என்று தடங்கள் செய்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர் உமாரம்யா மற்றும் நாட்றம்பள்ளி காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டவர்களிடம் சமரசம் செய்து நாளை சர்வே செய்வதாக கூறி சமரசப் பேச்சுவார்த்தை செய்து பிணத்தை அடக்கம் செய்ய வலியுறுத்தினர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.