ETV Bharat / state

ஊரடங்கால் தப்பிக்க வழியில்லை: சரணடைந்த குற்றவாளிகள் - ஊரடங்கால் தப்பிக்க வழியில்லாததால் சரணடைந்த குற்றவாளிகள்

வேலூர் : தங்கையை திருமணம் செய்ய இருந்தவரை கொலை செய்துவிட்டு ஊரடங்கால் தப்பிக்க முடியாமல், உணவுக்கு வழியில்லாமல் குற்றவாளிகள் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murder accused surrender in police station due to lockdown

author img

By

Published : Apr 20, 2020, 10:46 PM IST

Updated : May 18, 2020, 6:26 PM IST

வேலூர் கொசப்பேட்டை பகுதி எஸ்.எஸ்.கே. மானியம் தெருவில் கிளப் நடத்தி, பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள உதயா (எ) உதயகுமார் என்னும் நபர் அதே பகுதியை சேர்ந்த உறவுக்கார பெண்ணை முன்றாவதாக திருமணம் செய்ய இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த பெண்ணிண் சகோதரன் இம்மானுவேல் தன்னுடைய கூட்டாளிகளுடன் சென்று நேற்று மாலை உதயகுமாரை வீட்டில் இருந்து வெளியில் செல்லும்போது சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார். இதில் உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த வேலூர் தெற்கு காவல்துறையினர் தப்பியோடியவர்களை தேடிவந்தனர். இந்நிலையில் தேடப்பட்ட கொலை குற்றவாளிகள் இம்மானுவேல், நவின்குமார், நிர்மல், அந்திரியாஸ் ஆகிய நான்கு பேரும் இன்று வேலூர் தெற்கு காவல்துறையினரிடம் சரணடைந்தனர்.

இது குறித்த விசாரித்தபோது, கொலை செய்த நான்கு பேரும் தப்பிச்செல்லும்போது வழியில் சென்ற பெண்ணிடமிருந்து 10 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். தற்போது கரோனா வைரஸ் தடுப்புக்காக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் இவர்களால் வேலூரை விட்டு வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வழிப்பறி செய்த 10 சவரன் தங்க சங்கலியையும் விற்க முடியவில்லை.

மேலும் சாப்பிடுவதற்கு உணவகங்கள், கடைகள் எதுவும் இல்லாததால் உணவின்றி தவித்துள்ளனர். சரணடைய நீதிமன்றமும் இல்லாததால் காவல்நிலையத்தில் சரணடைவது என முடிவு செய்து வேலூரை அடுத்த சித்தேரியில் சுற்றி திரிந்துள்ளனர். பின்னர் வழக்கறிஞர் ஒருவரின் உதவியோடு காவலர்களை வரவழைத்து நால்வரும் சரணடைந்துள்ளனர்.

இதையடுத்து இவர்களை கைது செய்த காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் குடியாத்தம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் நீதிமன்ற காவலுக்குட்படுத்துபவர்களை வேலூர் மத்திய சிறையில் அடைக்காமல் குடியாத்தம் கிளைச்சிறையில் அடைப்பதற்கான காரணம் குறித்து வேலூர் மாவட்ட எஸ்.பி. பிரவேஷ்குமாரை கேட்டபோது, 'தற்போது கரோனா வைரஸ் பரவிவருவதால் இதனை தடுக்கும் பொருட்டு வேலூர் மத்திய சிறையில் குற்றவாளிகளை அடைப்பது இல்லை. இது போன்ற குற்றவாளிகளை தற்போதைக்கு குடியாத்தம் கிளைச் சிறையில் அடைத்து வருகிறோம். இதற்காக இந்த சிறை இப்போது பயன்படுத்தப்படுகிறது. இங்கு வருபவர்களுக்கும் முதலில் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படுகிறது' என்றார்.

இதையும் படிங்க... சுடுகாட்டுக்குச் செல்ல அனுமதி மறுப்பு: சடலத்துடன் போராட்டம் நடத்திய மக்கள்!

Last Updated : May 18, 2020, 6:26 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.