ETV Bharat / state

வேலூரில் சுரங்கப்பாதை: கதிர் ஆனந்த் எம்.பி., திறந்து வைப்பு!

author img

By

Published : Jan 26, 2022, 7:20 PM IST

Updated : Jan 26, 2022, 8:44 PM IST

வேலூர் சத்துவாச்சாரியில் சுரங்கப்பாதையை நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் இன்று (ஜன. 26) திறந்து வைத்தார்.

சுரங்கப்பாதையை திறந்து வைத்த எம்பி
சுரங்கப்பாதையை திறந்து வைத்த எம்பி

வேலூர்: சத்துவாச்சாரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு எதிர்ப்புறம் உள்ள தேசிய நெடுஞ்சாலையைப் பொதுமக்கள் கடக்கும் போது, எதிர்பாராதவிதமாக விபத்துகள் ஏற்பட்டு அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன.

இதனைத் தடுக்கும் வகையில், அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு 2020ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அன்றைய வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது.

சுமார் ரூ. 1.80 கோடி மதிப்புள்ள இந்த சுரங்கப்பாதைப் பணியானது பாதசாரிகள் மட்டும் நடந்து செல்லும் வகையில் 5.05 மீட்டர் உயரமும் 2.6 மீட்டர் அகலத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு மாதத்தில் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தத் திட்டம் பல்வேறு காரணங்களால் ஓராண்டு கழித்து நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் முன்னிலையில், வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த், இந்த சுரங்கப்பாதையினை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று (ஜன 26) திறந்து வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கதிர் ஆனந்த், 'இந்த சுரங்கப்பாதை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் கோரிக்கையை அடுத்து நிறைவேற்றப்பட்டது.

இதேபோன்று தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தைத் தடுக்க கந்தனேரி, வெட்டுவானம் மற்றும் ஆம்பூர் பைபாஸ் ராஜீவ் காந்தி சிலை அருகில் விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும். அந்த வகையில் குடியாத்தத்தில் ரூ.221 கோடி மதிப்பில் சுற்றுசாலை அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.

மேலும் மாவட்டத்தில் மத்திய அரசிடம் தேவையான அனைத்து நலத்திட்டங்களை கேட்டுப் பெற்றுவருகிறோம். காட்பாடி ரயில்வேயில் கூடுதல் மேம்பாலம் அமைக்கவும் மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். பழைய பாலமும் தயார் செய்யப்படவுள்ளது' என்றார்.

இதையும் படிங்க: மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசு நிராகரித்த அலங்கார ஊர்திகள்

Last Updated : Jan 26, 2022, 8:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.