ETV Bharat / state

மாணவியை கேலி செய்த இளைஞர் - கம்பத்தில் கட்டி வைத்து உதை!

author img

By

Published : Sep 7, 2019, 2:53 PM IST

வேலூர்: ஆம்பூர் அருகே பள்ளி மாணவியை கேலி செய்த இளைஞரை கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவியை கேலி செய்த இளைஞரை கம்பத்தில் கட்டிவைத்து உதை.!!

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மோதக பள்ளி பகுதியை சேர்ந்தவர் குமரேசன்-கவிதா தம்பதி. இவர்களின் மகன் பரத் வருமா(18), இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி பரத் வருமா அவருடைய கிராமத்திற்கு அருகே உள்ள பாசன பள்ளி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த அங்க்கியாபள்ளியை சேர்ந்த சிவமூர்த்தி என்பவரின் மகளை கேலி செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவியின் தந்தை சிவமூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் பாசனபள்ளி பேருந்து நிலையம் அருகே நேற்று இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்த பரத் வருமாவை வலுக்கட்டாயமாக அவர்களுடைய கிராமமான அங்க்கியா பள்ளி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த கம்பத்தில் பரத்தை கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த உமராபாத் காவல்துறையினர் கட்டிவைத்து தாக்கப்பட்ட அந்த இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மாணவியை கேலி செய்த இளைஞரை கம்பத்தில் கட்டிவைத்து உதைத்த உறவினர்கள்

பின்னர் மாணவியின் தந்தை சிவமூர்த்தி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து பரத் வருமா காவல்நிலையத்தில் உள்ளதை அறிந்து வந்த அவரது தாய் கவிதா, தனது மகனை 5 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று சாதிப் பெயரைச் சொல்லி கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். தொடர்ந்து சிவமூர்த்தியின் உறவினர்கள் 3 பேரை கைது செய்து உமராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:ஆம்பூர் அருகே பள்ளி மாணவியை கேலி கிண்டல் செய்ததாக இருசக்கர வாகனத்தில் 2 கிலோ மீட்டர் தூரம் அழைத்து சென்று கல் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக 3 பேர் கைது கேலி கிண்டல் செய்ததாக இளைஞர் பரத் வருமா கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Body:

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மோதக பள்ளி பகுதியை சேர்ந்தவர் குமரேசன் கவிதா தம்பதியர் மகன் பரத் வருமா இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் இன்று அவருடைய கிராமத்திற்கு அருகே உள்ள பாசன பள்ளி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது பள்ளி முடிந்து கடந்த 3/9/2019 அன்று வீட்டிற்கு சென்ற அங்க்கியாபள்ளி சேர்ந்த சிவமூர்த்தி என்பவரின் மகள் கேலி கிண்டல் செய்ததாக இன்று சிவமூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் பாசனபள்ளி பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த பரத் வருமா என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அவர்களுடைய கிராமமான அங்க்கியா பள்ளி பகுதியில் கல் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர் பின்னர் தகவலறிந்து வந்த உமராபாத் காவல்துறையினர் கட்டிவைத்து தாக்கப்பட்டு இருந்த பரத் வருமா என்ற இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் பின்னர் 12ஆம் வகுப்பு மாணவியின் தந்தை சிவமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பின்னர் பரத் வருமா தாய் கவிதா கொடுத்த புகாரில் தனது மகனை 5 பேர் கொண்ட கும்பல் வழுக்கட்டாயமாக கடத்திச் சென்று சாதிப் பெயரைச் சொல்லி கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியதாக பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்ததின் பேரில் சிவ மூர்த்தியின் உறவினர்கள் 3 பேரை கைது செய்து உமராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.