ETV Bharat / state

உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ-க்கள் கைது!

author img

By

Published : Jun 8, 2020, 6:51 PM IST

வேலூர்: 144 தடையை மீறி, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக செயல்பாடுகளைக் கண்டித்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்பூர் எம்.எல்.ஏக்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ க்கள்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட 38 ஊராட்சிகள், புதியதாக சேர்க்கப்பட்ட திருப்பத்தூர், மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 13 ஊராட்சிகளிலும், கரோனா பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு குடிநீர், அத்தியாவசியப் பணிகளை நிறைவேற்றக்கோரி, பல முறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கிராம ஊராட்சி நிர்வாகத்திடமும் மனு அளிக்கப்பட்டது. ஆனால் போதிய பணம் இல்லாததால், நடவடிக்கை இல்லை எனக் கூறியுள்ளனர்.

இதனால், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தைக் கண்டித்து, பொதுமக்களுக்கான குடிநீர், அத்தியாவசியப் பணிகளை நிறைவேற்றக்கோரியும், அணைக்கட்டு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், ஆம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களிடம் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, ஒரு வாரத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததையடுத்து, அவர்கள் அனைவரும் உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் 144 தடை உத்தரவை மீறி, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் உட்பட 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார்

இதுகுறித்து அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'தனது தொகுதியில் நீடித்து வரும் குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பணிகளை நிறைவேற்றாததால், இன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோம். மேலும் அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வார காலத்தில் தீர்வு காண்பதாக கூறியிருக்கிறார்கள். இதுகுறித்து தீர்வு காணாவிடில், அடுத்தகட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம். மேலும் அணைக்கட்டுத் தொகுதியில், குடிநீருக்கு பொருத்தப்படும், மோட்டார்களில் ஊழல் நடைபெறுகிறது. இதனையும் விசாரிக்க வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: இலவச மின்சாரம் ரத்து என்பது பொய் பரப்புரை: வானதி சீனிவாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.