திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இடையம்பாடி பகுதியிலுள்ள மாவட்ட விளையாட்டு திடலில், மாவட்ட விளையாட்டுக் கழகத் தலைவர் சீனிவாசன் தலைமையில் வாலிபால் விளையாட்டு கோப்பைக்கான புதிய கோப்பை அறிமுகம், போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சரும் ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான கே.சி. வீரமணி, மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் அமைச்சர் வீரமணி புதிய கோப்பையை அறிமுகப்படுத்தி வாலிபால் விளையாடி போட்டியைத் தொடங்கிவைத்தார். இப்போட்டியில் திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன.
இதையும் படிங்க: பேட்ஸ்மேன் முதலமைச்சர், பவுலர் அமைச்சர்!