ETV Bharat / state

'எந்தவொரு அரசுப் பள்ளியையும் மூடும் திட்டமில்லை' - செங்கோட்டையன் - sengottaiyan

வேலூர்: மாணவர்கள் எண்ணிக்கையை காரணம்காட்டி எந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடும் திட்டம் இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன்
author img

By

Published : Jul 24, 2019, 4:51 PM IST

வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று வேலூர் சலவன்பேட்டை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அதன் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

"அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை 67 ஆயிரம் மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்துள்ளனர். உருது மொழி பேசும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் மொழிபெயர்க்கப்பட்டுவருகிறது.

மாணவர்கள் எண்ணிக்கையை காரணம்காட்டி எந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடும் திட்டம் இல்லை. எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றார்.

அமைச்சர் செங்கோட்டையன்

தொடர்ந்து பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டிவருவது குறித்த கேள்விக்கு, பாலாற்றில் ஆந்திரா தடுப்பணை கட்டுவதற்காக நாங்கள் என்ன அரிவாளை எடுத்துக்கொண்டு செல்ல முடியுமா? என கேள்வியெழுப்பிய செங்கோட்டையன், மத்திய அரசு மூலம் தடுப்பு அணை கட்டுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை தமிழ்நாடு அரசு நிச்சயம் எடுக்கும் என்றார்.

திராவிட இயக்கம் என்பது அனைத்து தென் தமிழ்நாட்டு மக்களையும் உள்ளடக்கியது என குறிப்பிட்ட அவர், இதனால் பாலாறு விவகாரத்தில் சுமுகமான உறவை மேம்படுத்திவருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.

Intro:பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க அமைச்சர்கள் அரிவாள் எடுத்துவிட்டு செல்லமுடியுமா?

அமைச்சர் செங்கோட்டையன் பேட்டிBody:வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ சி சண்முகம் ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று வேலூர் சலவன் பேட்டை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார் பின்னர் அப்பகுதியில் உள்ள தேவாலய அமைப்புகள் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தது அதன் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், "அரசு பள்ளிகளில் முழுமையாக சைக்கிள் மற்றும் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது அதிமுக அரசுதான் எனவே அரசு பள்ளிகளில் சைக்கிள் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வி பெரிய வரவேற்பு பெற்றுள்ளது இதுவரை 67 ஆயிரம் மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்துள்ளனர் உருது மொழி பேசும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது வரும் வெள்ளிக்கிழமை மாலைக்குள் அனைத்து மாணவருக்கும் உருது மொழி புத்தகம் வழங்கப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு சென்று பாடம் நடத்துவது என்பது நிரந்தரமல்ல தற்காலிகமாக இந்த பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் இருப்பினும் பட்டதாரி ஆசிரியராக இருந்தாலும் கூட எல்கேஜி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர்களை தங்கள் குழந்தைகளாக நினைத்து பாடம் நடத்த வேண்டும் மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி எந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடும் திட்டம் இல்லை எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் இந்த ஆண்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் அடுத்த ஆண்டும் 2 முதல் 3 லட்சம் மாணவர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவே தரமான கல்வி கிடைக்க தமிழக அரசு அனைத்து வகையான முயற்சியும் செய்து வருகிறது என்றார். தொடர்ந்து பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வருவது குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது பாலாற்றில் ஆந்திரா தடுப்பணை கட்டுவதற்காக நாங்கள் என்ன அரிவாளை எடுத்துக்கொண்டு செல்ல முடியுமா? மத்திய அரசு மூலம் தடுப்பு அணை கட்டுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை தமிழக அரசு நிச்சயம் எடுக்கும் ஏனென்றால் சுமுகமான முறையில் நடவடிக்கை தேவைப்படுகிறது ஆந்திராவிலும் தமிழ் பேசும் மக்கள் உள்ளனர் தமிழகத்தில் ஆந்திரா தெலுங்கு பேசும் மக்கள் உள்ளனர் அதனால் சுமுக உறவு தேவைப்படுகிறது திராவிட இயக்கம் என்பது தமிழ் தெலுங்கு மொழி பேசும் மக்களை உள்ளடக்கிய இதனால்தான் பாலாறு விவகாரத்தில் சுமுகமான உறவை மேம்படுத்தி வருகிறோம்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.