வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில், தனியார் மண்டபத்தில் சமூக நலத்துறை சார்பில் கந்திலி, நாட்றம்பள்ளி வட்டாரங்களை சேர்ந்த 520 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைக்காப்பு விழா நடைபெற்றது. விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி "இந்தியாவில் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் குழந்தைகள் இறப்பு விகிதம் 28 சதவிகிதமாக உள்ளது" ஆனால், அம்மாவின் அரசின் பல்வேறு முயற்சியினால் தமிழகத்தில் அது 18 சதவிகிதமாகவும் தேசிய அளவில் முதலிடத்திலும் திகழ்கிறது என பேசினார்.