ETV Bharat / state

மேகதாது விவகாரத்தில் சித்தராமையா விவரம் தெரியாமல் பேசக்கூடாது - அமைச்சர் துரைமுருகன் காட்டம்! - கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா

Minister Durai murugan: மேகதாது அணை தொடர்பான பிரச்சனையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விவரம் தெரியாமல் பேசி வருகிறார் என தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கே.வி குப்பத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

சித்தராமையா கருத்துக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 7:35 PM IST

சித்தராமையா கருத்துக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே திமுக சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். இந்த நிகழ்ச்சி வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காந்திநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், "நான் திமுகவின் சாதாரண தொண்டனாக இருந்து, இன்று கழகப் பொதுச் செயலாளராக வளர்ந்திருக்கிறேன்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் திமுகவின் பவள விழாவிற்கு நான் தலைமைப் பொறுப்பு ஏற்று இருக்கிறேன். என்னுடைய கண்கள் உங்களைத் தேடிக் கொண்டிருக்கும். நீங்கள் வந்து கலந்து கொள்வதை நான் பார்த்து மகிழ்ச்சி அடைவேன். நான் திமுகவிற்கு பொதுச்செயலாளராக இருந்தாலும், என்னுடைய சொந்த கிராமம் கே.வி குப்பத்தில் தான் உள்ளது. ஆகையால் உங்களை வரவேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கண்ணீர் மல்க பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், வேலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளரருமான ஏ.பி.நந்தகுமார் உட்பட திமுக நிர்வாகிகள் பலர், பொதுமக்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு தேவையில்லாமல் தலையிடுகிறது. எங்க மாநிலத்தில் நாங்கள் கட்டுகிறோம் என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளாரே? இது குறித்து உங்கள் கருத்து என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் அவரை மதிக்கிறவன்.

ஆனால் மேகதாது விவகாரத்தில் முழு விவரம் தெரியாமல் கருத்துக்களை தெரிவித்துள்ளது ஒரு போதும் ஏற்றுகொள்ளப்படாது எனத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, டெல்லியில் இன்று நடைபெறும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் விட முடியாது என கர்நாடக அரசு தெரிவிப்பதாக ஒரு தகவல் வந்துள்ளதே? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "எப்போதும் கர்நாடகா அரசு அப்படி தான் சொல்லி வருகிறார்கள். இன்றைக்கும் அப்படித்தான் சொல்வார்கள். விரைவில் இதற்கு தீர்வு காணப்படும்" என பதிலளித்தார். தமிழக முழுவதும் மணல் குவாரிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதே? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதுபற்றி தமக்கு ஒன்றும் தெரியாது எனக்கூறி மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அங்கிருந்துச் சென்றார்.

இதையும் படிங்க: மேகதாது அணைக்கு அனுமதி தொடர்பாக கர்நாடக முதலமைச்சரின் பேச்சு ஆபத்தானது- ராமதாஸ் அறிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.