ETV Bharat / state

அரை நிர்வாணமாக்கி ராகிங் - மருத்துவ மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட் - cmc medical college

கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரி (CMC) மாணவர்களை அரை நிர்வாணமாக்கி ராகிங் செய்த வீடியோ வைரலானதை அடுத்து, 7 சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவ கல்லூரி மாணவர்கள் அரை நிர்வாணமாக ராகிங்

author img

By

Published : Nov 9, 2022, 3:35 PM IST

Updated : Nov 9, 2022, 4:46 PM IST

வேலூர்: கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட ஏழு சீனியர் மாணவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை டவுசருடன் விடுதி வளாகத்தைச்சுற்றி வர வைத்த சம்பவம் தற்போது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணைக்குப்பின்னர் இவர்களது மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கல்லூரியின் முதல்வர் டாக்டர் சலாமன் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். கல்லூரியில் நிறுவப்பட்டு இருக்கும் கமிட்டிக்கு, கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒரு கடிதம் கிடைத்தது என்றும்; அதில் யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், ''மாணவர்கள் தங்கும் விடுதியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆடைகளை களைந்து விடுதி வளாகத்தை நடந்து சுற்றி வர வைத்தனர்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை சிலர் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், “இதுபோன்ற ராகிங் செயல்களை ஒருபோதும் நிர்வாகம் சகித்துக் கொள்ளாது. விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கல்லூரி முதல்வர் சாலமன் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

எவ்வாறு தாங்கள் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை அந்த மாணவர்களே தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். அதில், மாணவர்கள் அரை டவுசரில் கல்லூரியில் தங்கும் விடுதியைச் சுற்றி வருகின்றனர்; அவர்கள் மீது தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சக மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவக்கல்லூரி மாணவர்கள் அரை நிர்வாணமாக்கி ராகிங் - 7 பேர் சஸ்பெண்ட்

இந்தச்சம்பவம் விடுதியில் கடந்த 9-ம் தேதி நடந்ததாகவும், இதற்கு காரணமானவர்கள் மீதும், விடுதி வார்டன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கிடையில், இதுகுறித்து டெல்லியில் இருக்கும் ராகிங் தடுப்புப் பிரிவுக்கு புகார் சென்று இருப்பதாக, தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவர் டாக்டர் கார்த்திக், ”இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை பேருந்தில் பட்டாக்கத்தியை தரையில் தேய்த்தபடி பயணித்த மாணவர்கள் கைது

Last Updated : Nov 9, 2022, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.