வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஆறு வயது சிறுமியை கையால் வாயை பொத்தி தனது வீட்டிற்கு கடத்திச் சென்றார். அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று (டிச.28) வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:தாய்க்கு தெரியாமல் விற்கப்பட்ட பெண் குழந்தை - பெங்களூரு சென்று குழந்தையை மீட்ட தனிப்படை!