ETV Bharat / state

காதலை சேர்த்து வைக்கக்கோரி இளைஞர் தற்கொலை முயற்சி - இளைஞர் தற்கொலை முயற்சி

வேலூர்: காதலியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்ஃபோன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

காதலை சேர்த்து வைக்ககோரி இளைஞர் தற்கொலை முயற்சி

author img

By

Published : Jun 4, 2020, 4:29 PM IST

கே.வி.குப்பம் பகுதியில் உள்ள செல்ஃபோன் கோபுரத்தின் மீது ஒரு இளைஞர் திடீரென நேற்று மாலை ஏறியுள்ளார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கோபுரத்தின் மீது ஏறிய நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, அவர் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டியன் (25) என்றும், கே.வி.குப்பம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை தான் காதலித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அப்பெண்ணின் பெற்றோர் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும், அதனால் தன் காதலியுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கூறிய அந்நபர், காதலியுடன் சேர்த்து வைக்காவிட்டால் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வேன் எனவும் கூறியுள்ளார்.

காதலை சேர்த்து வைக்கக்கோரி இளைஞர் தற்கொலை முயற்சி

உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கோபுரத்தின் மீது இருந்த நபரை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் ஐந்து மணி நேர போராட்டத்திற்குப் பின் டவரில் இருந்து ராஜபாண்டியன் பத்திரமாக கீழே இறக்கப்பட்டார். இதுகுறித்து கே.வி.குப்பம் காவல் துறையினர், ராஜபாண்டியன் காதலிப்பதாகக் கூறிய பெண்ணை அழைத்து விசாரித்ததில், இருவரும் காதலிக்கவில்லை என்று அப்பெண் மறுத்துள்ளார்.

இதையும் படிங்க: திருமணத்திற்கு மறுத்த காதலியை உயிருடன் எரித்தவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.