வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மணிகண்டனை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று (டிச. 21) வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு!