ஆந்திரா மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்தவர் மது சுதாகர் (31). இவர் கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு தாவி நோக்கிச் செல்லும் விரைவு ரயிலில், ஓங்கோல் வரை செல்ல முதல் வகுப்பில் பயணம் செய்துள்ளார்.
இந்நிலையில், ரயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே கேட் அருகே சென்றுகொண்டிருக்கும்போது ரயிலிலிருந்து மது சுதாகர் கீழே விழுந்து உடல் சிதறி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவம் இடம் சென்ற காவல் துறையினர் ஆங்காங்கே துண்டு துண்டாகச் சிதறிக்கிடந்த உடல் பாகங்களை ஒன்றுசேர்த்து உடற்கூறாய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
உயிரிழந்த நபர் படியில் நின்று பயணம் செய்தபோது தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என ஜோலார்பேட்டை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க : டிக் டாக் நட்பு... பெண்ணின் வாழ்க்கை பாதை மாறிய சோகம்!