நாடு முழுவதும் தேர்தல் நடந்த போதிலும் பணப்பட்டுவாடா நடந்ததாகக் கூறி வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது.
பின்னர், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அவரின் வீட்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டதால் அவரின் மனு நிராகரிக்கப்பட வேண்டும் என சில கட்சிகள் ஏற்கனவே முறையிட்டிருந்தன.
முன்னதாக அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தின் வேட்புமனுவும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.