வேலூர்: ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 30ஆம் ஆண்டு விழா இன்று (மே8) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 10,008 பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இன்று (மே8) காலை 9 மணி அளவில் மஞ்சள் நீர் கலசங்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து நாராயணி பீடத்தின் சுயம்பு அம்மனுக்கு தங்கள் கைகளால் பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். இதனைத்தொடர்ந்து காலை 11 மணியளவில் ஸ்ரீ நாராயணி மூலமந்திர யாகம் நடந்தது.
ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் நடைபெற்ற இந்த யாகபூஜையில், 'கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு சுயம்பு அம்மனுக்கு அவருடைய கைகளால் அபிஷேகம் செய்தார். பின்னர் ஸ்ரீ சக்தி அம்மாவுடன் இணைந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு புறப்பட்டு சென்றார்.
இதையும் படிங்க: தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதி?