ETV Bharat / state

ஓடும் ரயிலில் குட்கா விற்பனை - இருவர் கைது..!

திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் குட்கா, பான் மசாலா விற்பனை செய்த இருவரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பத்தூர் ரயில் குட்கா விற்பனை இருவர் கைது ஜோலார் பேட்டை ரயில் குட்கா விற்பனை இருவர் கைது கன்னியாகுமரி - அஸ்ஸாம் விரைவு ரயில் குட்கா விற்பனை Thirupattur Gutka Sales persons Arrested Jolarpeattai railway station Gutka Sales persons Arrested Kanyakumari - Assam Fast Train Kutka Sale
Thirupattur Gutka Sales persons Arrested
author img

By

Published : Jan 24, 2020, 9:05 PM IST

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் லோகேஷ், சங்கர். இவர்கள் இருவரும் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து கன்னியாகுமரி - அஸ்ஸாம் வரை செல்லும் விவேக் விரைவு ரயிலில் ஏறினர். அப்போது, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கும் குட்கா, பான் மசாலா ஆகியவற்றை எடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், விரைவு ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்தபோது ரயில்வே காவல் துறையினர் ரயில் பெட்டிகளில் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இவர்கள் இருவரையும் பிடித்து சோதனை செய்தனர். அதில், அவர்களிடம் 10 கிலோ அளவிலான குட்கா, பான்மசாலா இருந்தது தெரியவந்தது.

ரயிலில் குட்கா விற்பனை செய்த இருவர் கைது

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் குட்காவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:

தெலங்கானாவில் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளான வழக்கில் திடீர் திருப்பம்!

Intro:Body:ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் விற்பனை செய்ய இருந்த 10கிலோ குட்காவை பறிமுதல் செய்து 2பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்....

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கள்ளத்தனமாக கன்னியாகுமரியிலிருந்து அஸ்ஸாம் மாநிலம் திருப்கார் வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் குட்கா, பான் மசாலா விற்பனை செய்ய அரக்கோணம் பகுதியை சேர்ந்த லோகேஷ், சங்கர் ஆகிய இரண்டு பேர் ரயிலில் 10 கிலோ எடை கொண்ட குட்கா பான் மசாலா ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது சோதனையில் ஈடுபட்டிருந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறை ஆய்வாளர் வடிவுகரசி அவர்களை பிடித்து சோதனை செய்ததில் 10கிலோ குட்கா இருப்பது தெரியவருகிறது. அதனை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து திருப்பத்தூர் ஒருகிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.