திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கணவாய்புதூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இதே ஊராட்சியில் தண்ணீர் பம்பு ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.
இன்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு பஜார் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். வீடு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோவின் கதவுகள் திறந்துகிடந்தன.
அதிலிருந்த மூன்று பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள், பணம் கொள்ளைபோனது தெரியவந்தது.
இது குறித்து நாராயணன் வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க : கோடநாடு கொலை வழக்கு - அரசு தரப்பு ஆள்மாறாட்டம் செய்ய முயற்சிப்பதாக புகார்!