வேலூர்: அதிமுக மகளிர் அணி இணை செயலாளர் கலையரசி என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று (ஏப்ரல் 4) சோதனை நடத்தினர்.
வேலூர் மாநகராட்சி சைதாப்பேட்டை 25ஆவது வார்டு தோப்பாசாமி தெருவில் உள்ள அதிமுக மகளிர் அணி இணை செயலாளர் கலையரசி என்பவரது வீட்டில் இருந்து, அப்பகுதி வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம், வருமான வரித்துறையினரை சோதனை செய்ய உத்தரவிட்டார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக சுமார் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் இதுவரை எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.