வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த வாரம் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் அதிபராக பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில், வாஷிங்டன் பகுதியில் இந்திய அமெரிக்க அமைப்புகள் இணைந்து தீபாவளி பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர். தேர்தல் நடந்து முடிந்த பிறகு நடந்த முதல் பெரிய கொண்டாட்டமாக இது அமைந்துள்ளது.
இந்து அமெரிக்கன் அறக்கட்டளை, அமெரிக்க சீக்கியர்கள், வட அமெரிக்காவின் ஜெயின் அசோசியேஷன் மற்றும் ஆர்ட் ஆஃப் லிவிங் உள்ளிட்ட பல இந்திய அமெரிக்க அமைப்புகளுடன் இணைந்து ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோயில் இந்த கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இதையும் படிங்க: ராணுவ அமைச்சர் முதல் சிஐஏ இயக்குநர் வரை.. ட்ரம்ப் டிக் செய்த நபர்கள் யார் யார்..?
தீபாவளி கொண்டாட்டத்தில் பேசிய செனட்டர் ராண்ட் பால், '' அமெரிக்கா புலம்பெயர்ந்தோர் நாடு.. இது உலகெங்கிலும் உள்ள சிறந்தவர்களை ஈர்க்கிறது. அமெரிக்காவை ஒரு சிறந்த நாடாக மாற்ற புலம்பெயர்ந்தோர் ஒன்றிணைகிறார்கள். நான் ஒரு பெரிய வழக்கறிஞர் ஆவேன்.. சட்டபூர்வமான குடியேற்றத்தை விரிவுபடுத்த என்னிடம் நிறைய மசோதாக்கள் உள்ளன. அதை செயல்வடிவமாக்க தொடர்ந்து முயற்சிப்பேன்'' என்றார்.
மேலும், இந்த நிகழ்வில் இந்திய அமெரிக்கர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மிசிசிப்பி செனட்டர் சின்டி ஹைட்-ஸ்மித், '' அடுத்த நான்கு ஆண்டுகளை சிறப்பாக எதிர்நோக்குகிறேன்.. இந்த நாட்டிற்கு செழிப்பை வழங்க விரும்புகிறோம்.. புதிதாக ஒன்றைத் தேட விரும்புவோருக்கு, புதிதாக ஏதாவது செய்ய விரும்புகிறோம். ஒரு நிலையான சூழ்நிலையை நாங்கள் பெற விரும்புகிறோம் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். நாங்கள் ஒரு சிறந்த பொருளாதாரத்தை விரும்புகிறோம் எனவும் உங்கள் குடும்பத்தை வளர்ப்பதற்கு, பாதுகாப்பான இடத்தை அமைத்துக்கொள்வதே எங்கள் விருப்பம்'' என்றார்.
தொடர்ந்து அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா பேசுகையில், இது ஒரு இந்தியப் பண்டிகையாகும், இது உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால் தழுவி கொண்டாடப்படுகிறது. நீங்கள் இங்கு இருப்பதும், உங்களுடன் ஏராளமான எம்பி-களும், செனட்டர்களும் கலந்துகொண்டிருப்பதும் மிகவும் சிறப்பான தருணமாகும். இது நல்ல உறவுக்கான உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும்'' என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்