வேலூர் மாவட்டத்திற்கு வரும் 21-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். அப்போது பல்வேறு துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அதற்காக பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மனுக்களை பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன்: ’கிராமப்பகுதிகளில் பட்டா கேட்டு போனாலோ அல்லது முதியோர் உதவித் தொகை கேட்டுப்போனாலோ ரூ.15 ஆயிரம் கொடு, ரூ.10 ஆயிரம் கொடு என இடைத்தரகர்கள் லஞ்சம் கேட்டு சுற்றிக்கொண்டு இருக்காங்க. இதெல்லாம் மிக தவறு, ஏழைகளுக்கு உதவி செய்யும்போது அவர்களது வயிற்றெரிச்சலை கொட்டிக்க கூடாது.
ஆகையால் தான், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மனுக்களைப் பெற்று வருறோம். இதில் கலந்துகொண்டு மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்க முடியாது. ஆக்கிரமிப்பு அகற்றப்படும். அதற்கு மாற்றாக மாற்று இடம் வழங்கப்படும்’ என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
இதையும் படிங்க:மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசு சூழ்ச்சி - அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு