கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
இதில் அனைத்துத்துறை அலுவலர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஆட்சியர் சண்முகசுந்தரம், 'காய்கறி அங்காடிகள் மூலமாக தொற்று பரவுவதைத் தடுக்க, வேலூர் நேதாஜி காய்கறிச் சந்தையில் சில்லறை விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது.
அங்குள்ள சில்லறை வணிகக்கடைகள், மாங்காய் மண்டி மைதானத்திற்கு மாற்றப்பட்டு, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்' எனத் தெரிவித்தார்.
அதன்படி தகர ஷீட்டைக் கொண்டு, சில்லறை வணிகக்கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் வாரச்சந்தைகளுக்குத் தடை விதிக்கப்பட்டு, ஏற்கனவே செயல்பட்டு வந்த பள்ளி, கல்லூரி வளாகங்களிலேயே காய்கறிக் கடைகள் தொடர்ந்து செயல்படும் எனவும் மாவட்டஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 'அண்ணாத்த' ரஜினியுடன் இயக்குநர் சிவா!