வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டு மேல்விஷாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்நிலையில் நேற்று (ஜூன் 11) மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தபோதிலும் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.
இதுவரை வேலூர் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்றுக்கு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 20 வயது கர்ப்பிணி உள்பட இரண்டு பேர் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் நான்கு பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 135 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 43 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க...22 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்றுகிறது ஜெர்மன் விமான நிறுவனம்!