ETV Bharat / state

5 ஆண்டுகளில் வக்கீல் தொழில் முதன்மைத் தொழிலாகும் - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு

இனிவரும் 5 ஆண்டுகளில் வழக்கறிஞர் தொழில், முதன்மைத் தொழிலாக மாறும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் காட்பாடியில் நடந்த பள்ளி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 19, 2023, 11:15 AM IST

Updated : Mar 19, 2023, 12:12 PM IST

5 ஆண்டுகளில் வக்கீல் தொழில் முதன்மைத் தொழிலாகும் - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு

வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி சன்பீம் மெட்ரிக்(Sunbeam CBSE school), சி.பி.எஸ்.இ ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளின் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தலைமை தாங்கினார். தாளாளர் தங்கபிரகாஷ், முன்னிலை வகித்தார். பள்ளி துணைத்தலைவர் ஜோன் ஆர்த்தி வரவேற்புரை ஆற்றினார். இந்த விழாவில் சிறப்பு விருந்திநராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் கலந்துகொண்டார்.

நீட் தேர்வில் (NEET Exam) தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் 13 மாவட்டங்களில் முதலிடம் பிடித்த மாணவர் தமிழ்ச்செல்வன், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவர் பயாஸ் ஜமால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஜோதி ரோஷினி, இரண்டாம் இடம் பிடித்த மாணவர் ஆர்.கோ.முகர்ஜி ஆகியோருக்கு விருதும் பதக்கங்களும் அளிக்கப்பட்டன.

அத்தோடு, ஒவ்வொரு பாடத்திலும் முழு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் சயின்ஸ் பீம் தேர்வில் (Science Beam Exam) வகுப்பு வாரியாக முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் என 900 பேருக்கு விருதுகளை வழங்கினார்.

High Court Judge Ramesh
பள்ளி ஆண்டுவிழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி

பின்னர் விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பேசுகையில், இந்த விழாவை பார்க்கும் போது, தன்னுடைய பள்ளிக்கால நினைவுகள் நினைவுக்கு வருவதாகவும், பள்ளியில் படித்து விட்டு வெளியே வந்த பின்பு நாம் பள்ளியில் நடந்தவற்றை நினைவு கூர்ந்து பார்ப்பதாகவும் கூறினார். நீங்கள் படிக்கும் போதே, உங்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பு, மரியாதை அளிக்க வேண்டும் என்றும் படிக்கும் காலத்திலேயே அவர்களை நேசிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

வேலூரில் தான் நுழைந்தபோது, சன்பீம் பள்ளி மாணவர் நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்ற விளம்பரத்தை பார்த்தபோது, பள்ளியின் மீது மரியாதை ஏற்பட்டதாகவும், தான் பார்த்த சிறந்த பள்ளிகளில் சன்பீம் பள்ளியும் ஒன்று எனவும் வாழ்த்தினார். இங்கு பள்ளி வளாகம் சிறப்பாக உள்ளதாகவும், நாம் படிக்கும் காலத்தில் பள்ளி வளாகம், உள்கட்டமைப்பும் முக்கியம் என்றும் நாம் படிக்கும் பள்ளி நமக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கிறது என்றும்;

மற்ற பள்ளி மாணவர்களுக்கு கிடைக்காத கட்டமைப்பு வசதிகள் உங்களுக்கு கிடைத்துள்ளது எனவும்; எல்லா மாணவர்களுக்கும் உங்களை போல வாய்ப்பு கிடைக்காது என்றும்; ஆனால், நீங்கள் அந்த வாய்ப்பை பெற்றுள்ளீர்கள் என்றும் அதற்கு உங்கள் பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

நிகழ்ச்சியில் மேலும் பேசிய அவர், 'நீங்கள் எவ்வளவு பேர் வக்கீல், நீதிபதியாக வருவீர்கள்? என தெரியவில்லை என்றும்; வருகிற 5 ஆண்டுகளில் வக்கீல் தொழில் முதன்மையான தொழிலாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இல்லத்து அணியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை மெட்ரிக் பள்ளியில் மார்வல் அணியும், சி.பி.எஸ்.இ. பள்ளியில் நேதாஜி, பட்டேல் அணிகளும் பரிசு பெற்றது. முடிவில் சி.பி.எஸ்.இ.பள்ளி முதல்வர் ரத்தீஷ் நன்றி கூறினார்.

இதையும் படிங்க: ஏழை மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றும் பள்ளி

Last Updated : Mar 19, 2023, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.