வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அடுத்த அகரம்சேரி பகுதியில் அரசு மதுபானங்களை அதிக விலையில் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த காவல் துறையினர் கோவிந்தராஜ் மற்றும் சுரேஷ், சங்கரன் ஆகியோர் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்ததோடு, விற்பனைக்காக அவர்கள் வைத்திருந்த 240 மது பாட்டில்களை பள்ளிக்கொண்டா காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.